Popular Posts

Friday, October 15, 2010

காதல்

நீ பிறந்ததால்
நான் இறந்தேன்
நாம் ஆனோம்

உன்னை பார்த்தால்
என்னை இழந்தேன்
உன்னில் கரைந்தேன்

உன்னை பார்க்கும் வரை
காதல் ஒரு பேத்தல்
உன்னை பார்த்த பின்
காதல் என் வேதம்
இந்த  உலகில் உன்னை விட
நான் நேசிப்பது என் அலைபேசி கருவியை தான்
அது தான் தூது செல்லும் புறாவாகி
என் காதலை உனக்கு சொல்கிறது   
நம் காதலை கின்னசில் கூட எழுத முடியவிளையம் 
என் எனில் நம் காதல் வேத ரகசியமானது 

என் காதலை உனக்கு சொல்ல 
நான் பாடகியும் அல்ல
நான்  காதலை  எழுத பாடகியும் அல்ல
நான் காதலை வெளிபடுத்த ஓவியனும்  அல்ல

சுதந்திர நிலை

வெறுமை
இருமை
பொய்மை
பொறாமை
இனிமை
இல்லாமை
கல்லாமை
எளிமை
மெய்ம்மை
அச்சம்
காமம்
காதல்
என்ற அனைத்து
உணர்வுகளையும்
கடந்து
ஒன்றுமில்லா
சுதந்திர நிலையை தொட்டு பாருங்கள்
உலகம் இருந்தும் இல்லா திருப்பது போல் நிலைக்கும்!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வாழ பல வகை உண்டு

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வாழ பல வகை உண்டு  
ஒரு நாள் பூக்களை பற்றி மட்டும் சிந்தி பல பூக்களை கொணர்ந்து   முகர்த்து பார் 
ஒரு நாள் பழங்களை மட்டும் சிந்தி பல    பழங்களை கொணர்ந்து சுவைத்து பார்
ஒரு நாள் நீரை மட்டும் சிந்தி பல நீரை கொணர்ந்து சுவைத்து பார்
ஒரு நாள் பல வண்ணங்களை மட்டும் சிந்தி பல வண்ணங்களை கொணர்ந்து ரசித்து பார்
ஒரு நாள் பல கவிகளை மட்டும் சிந்தி பல கவிதைகளை கொணர்ந்து ரசித்து பார்
ஒரு நாள் பல கோவில்களை மட்டும் சிந்தி பல கோவில்களுக்கு சென்று பார்
ஒரு நாள் பல சிற்பங்களை  மட்டும் சிந்தி பல சிற்பிகளை பற்றி ஆராய்
.....
....
...
நிரப்புக மீதி நாளை உன் விருப்பம் போல் 

தோழியே,  
நீ படித்து பார்க்க ஏராளமான புத்தகம் உள்ளத
நீ பார்த்து ரசிக்க  ஏராளமான இடங்கள் உள்ளது
நீ பழகி பார்க்க ஏராளமான மனிதர்கள் உள்ளனர்
கடல் போன்று கணக்கில் அடங்கா மனிதர்கள் இருந்தும் நாம் எதனை பேர் மனதில் வாழ்கிறோம்
எத்தனை பேர் நம் மனதில் வாழ்கிறார்கள் என்று பார்த்தல்விளையாட்டு மிக சிறிய வட்டத்ர்க்குள்  தான்  உள்ளது
ஒன்று வத்தை பெருத்து படுத்துவோம்
இளைஎஸ் வட்டம் இல்லாமல் வாழ்வோம்
நீ கணக்கிடு எவ்வளவு சம்பாதித்தோம் எவ்வளவு செலவளித்தோம்
இரண்டும் எதிர் துருவத்தில் thaan இருக்கும் 
இது கூட ஒரு சம சீர் நிலைக்கு வரவேண்டும்

இயற்க்கை

இயற்க்கையின் இயக்கத்தில்
பிழையா?
இருக்காது ஒருகாலும் இருக்காது
பிறப்பின் ரகசியம்  
பிறருக்கும், நமக்கும்
தெரியாதது தான் பிழை!
வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் வந்தாலே 
இயற்க்கை எளிதில் புரிந்துவிடும்
பிரமாண்ட அண்டத்தை
பிசகு இல்லா இயக்கத்தில்
ஒவ்வொரு மனிதனும் 
தூசு போல் சுழல்பவன் 
பிறர் கண்ணில் விழாமல் வாழ்தலே 
 இயற்க்கையின் அண்மை வாழ்வு!

Avasaram

ஆர்வத்தின் அவசரத்தால்
பல அறிய விசயங்களை காணமுடிவதில்லை