Popular Posts

Friday, October 15, 2010

Nee

உன் முன்னழகை பார்த்தால் முத்தெடுக்க செய்யும்
உன் பின்னழகை  பார்த்தால்  பிதங்க்கொள்ள  செய்யும்

வெற்றி

வெற்றியின் அளவுகோல் - ஆசை மற்றும் செயலின் வெளிப்பாட்டினை பொருத்தது 
தாயின் வெற்றி  
குழந்தையின் முகத்தில்
அரசியலின் வெற்றி  
ஓட்டு  எண்ணிக்கையில்
மாணவனின் வெற்றி  
மதிப்பெண்ணில் 
காதலின் வெற்றி  
இணைதலில்
தொழிலின் வெற்றி  
லாபத்தில்
ஆன்மீகத்தின் வெற்றி  
பற்றற்ற வாழ்வில்  

 பாமரனின் வெற்றி
வயிறு நிறைவதில்
தேசத் தலைவரின் வெற்றி
நாட்டின் வளர்ச்சியில்
கவியின்  வெற்றி
கற்பனை வளத்தில்
நாட்டின் வெற்றி
பொருளாதார வளர்ச்சியில்
வாலிபனின் வெற்றி
சுதந்திர  வாழ்வில்
முதுமையின்   வெற்றி
அன்பான வாழ்வில்
குழந்தையின் வெற்றி
பொறுப்பான வளர்ப்பில்
அமைதியின் வெற்றி
வளமான வாழ்வில்
சிற்பியின் வெற்றி
சிற்பத்தின் அழகில்
ஓவியனின் வெற்றி
ஓவிய அழகில்
இயற்கையின் வெற்றி
படைத்தல், காத்தல், அழித்தலில்
தமிழின் வெற்றி
பாரினில் எங்கெங்கும்!

Matham

மதங்களை தாண்டி மனித  மனதிற்குள்
நுழைவதற்குள் மனிதன் மாண்டு விட வேண்டும்  

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வாழ பல வகை உண்டு

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வாழ பல வகை உண்டு  
ஒரு நாள் பூக்களை பற்றி மட்டும் சிந்தி பல பூக்களை கொணர்ந்து   முகர்த்து பார் 
ஒரு நாள் பழங்களை மட்டும் சிந்தி பல    பழங்களை கொணர்ந்து சுவைத்து பார்
ஒரு நாள் நீரை மட்டும் சிந்தி பல நீரை கொணர்ந்து சுவைத்து பார்
ஒரு நாள் பல வண்ணங்களை மட்டும் சிந்தி பல வண்ணங்களை கொணர்ந்து ரசித்து பார்
ஒரு நாள் பல கவிகளை மட்டும் சிந்தி பல கவிதைகளை கொணர்ந்து ரசித்து பார்
ஒரு நாள் பல கோவில்களை மட்டும் சிந்தி பல கோவில்களுக்கு சென்று பார்
ஒரு நாள் பல சிற்பங்களை  மட்டும் சிந்தி பல சிற்பிகளை பற்றி ஆராய்
.....
....
...
நிரப்புக மீதி நாளை உன் விருப்பம் போல்  
 

நண்பா

முடிவான வேலைகள்
முடியட்டும் 
முடிவற்ற   வேலைகள்
தொடரட்டும்

உரிமை கொண்ட
உறவுகளை விட
உயிரை கொடுக்கும்
நட்பு சுகமானது
அது தான் நட்பின் உயர்வு

என்னை சுற்றி
ஆயிரம் உறவுகள் இருந்தும் 
எனக்கென்று இறைவன் உன்னை 
பரிசாக கொடுத்தான் 
இந்த உறவை நேசிக்கவில்லை  பூஜிக்கிறேன் சுவாசிக்கிறேன்

என் உயிர் நண்பா
உன் பெயரை கூட
நான் எழுதவில்லை
என் தெரியுமா?
"பேனா முள்" உன்னை குத்துமே என்று 

உன்  நட்பில் நிஜத்தை பார்த்தேன்
உன்னை நேசித்தேன்
உன் ஒவ்வொரு உணர்விலும் இருக்கும் 
உயிரோட்டத்தை உணர்ந்தேன்

காதல்

எனக்கென ஏற்கனவே பிறந்தவன்  நீ    
இருந்தும்
இந்நாள் வரை என்னை ஏங்க வைத்தாய்  
கற்பனையில் இருந்த உன்னை நாளும் தேடி தேடி
கலைத்து போனேன்
கலங்கி வாடிய நேரத்தில் என் வாழ்க்கையின் கலங்கரையாய்        
கண் முன்னே காட்சி தந்தாய்
கண்டேன் கண்டேன் என் கண்ணாளனை  
களிந்தேன் களிந்தேன் மேலும் மேலும்
விண்ணோரும் மண்ணோரும் கண்டிராத   காதலை
உன்னோடு நான் காண ஏங்கினேன்
உணர்ந்தேன் உணர்ந்தேன் நம் காதல் இரண்டற கலந்ததை
நினைவோடு  நினைவாய் நிலைத்ததை 
காதலின் உச்சத்தை காட்டிய என் காதலனே 
நீ பிறந்ததை என் வாழ்வின் பொன் நாளாய் எண்ணி 
நம் காதல் சாம்ராஜ்யத்தின் முதல் விழாவாக 
கொண்டாடி மகிழும் உன் உயிர் காதலி 

காதலா நீ எனக்கு கிடைபய என ஏங்கவில்லை 
காதல் பூத்ததே எனக்கு பூரணமானது 
அதன் வாசம் என்றும் வீசி கொண்டேயிருக்கும் என்றென்றும் 
எந்த பூவின் வாசம் நாளும் நாளும்  மணக்கும் 
நான் என்ற பூ மண்ணில் மடியும் வரை 

காணத்துடித்தேன் 
கவிதைகளையும் ஓவியங்களையும் 
கண்டேன் 
உன் உணர்வுகளையும் உள்ளத்தையும் 
உருவெடுத்தேன் 
கவிஞனாகவும் கலையனாகவும் 
உருவாக்கினேன் என்னை உனக்கு 


விடியலும் அழுத்தமானது விரைவில் உன்னை காண 
காற்றாய் கரைந்தது கண்டவுடன் - உன்னை

கட்டியது கூடு மட்டும் அல்ல - நெஞ்சில்
கலந்தாய் இரண்டற - அணுவில் 


அறிவியலை அறிய 
குவாண்டம் இயற்பியல் 
  குவாண்டம்  மெமரி உருவாக்கியது 
நம் காதலை அறிய 
குவாண்டம்  லவ் உருவாக்குவோம் 

இசையை ரசித்தேன் 
உன்னை பார்க்கும் முன் 
 இசையை சுவாசித்தேன் 
உன்னை பார்த்த பின் 

காதல் என் வாழ்க்கையின்
பரிணாமத்தையே மாற்றியது 


ஒவ்வொரு விடியலும் இனிமை 
         ஒவ்வொரு செயலும் இனிமை 
ஒவ்வொரு பார்வையும் இனிமை 
ஒவ்வொரு அழைப்பும் இனிமை  
ஒவ்வொரு உணர்வும் இனிமை 
ஒவ்வொரு மணித்துளியும் இனிமை 
ஒவ்வொன்றும் நீ என் அருகில் இருந்தால் 

நட்பு

சீரும் சிறப்புமாய்
வாழ்வும் வளமுமாய்
பேரும் புகழுமாய்
பாசமும் பண்புமாய் 
நன்றியும்   நட்புமாய்
காதலும் கனிவுமாய்
கருணையின் உருவமாய் 
சிரிப்பும் சிந்தனையுமாய்
ஆயகலையுடனும் அஷ்டலக்ஷ்மியுடனும் 
இன்றும் என்றும் 
வளமோடு வாழ 
உளமார வாழ்த்தும் 
நட்பு தோழி